DAILY THANTHI JOBS |
- சிட்டி யூனியன் வங்கியில் மேலாளர் பணி
- பெல் நிறுவனத்தில் ஒப்பந்த பொறியாளர் பணி
- தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் பணி
சிட்டி யூனியன் வங்கியில் மேலாளர் பணி Posted: 04 Feb 2015 05:14 PM PST தனியார் வங்கிகளில் முன்னணி வங்கியாக விளங்கும் சிட்டி யூனியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள கிளை மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: கிளை மேலாளர் கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். குறிப்பு: வணிக வங்கிகளில் கிளை வங்கி, கடன், மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற துறைகளில் அதிகாரி அல்லது மேலாளராக குறைந்தபட்ச 5 வருடங்கள் சேவை செய்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Senior General Manager (HR & BD), City Union Bank Ltd., Administrative Office, 24-B, Gandhi Nagar, KUMBAKONAM – 612 001. TAMIL NADU. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.02.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cityunionbank.com/PageMenuDocs/CUB_CAREERS_BM.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும். |
பெல் நிறுவனத்தில் ஒப்பந்த பொறியாளர் பணி Posted: 04 Feb 2015 04:53 AM PST பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட பொறியாளர் பணியிடங்களுக்கு வருகின்ற பிப்ரவரி 08 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை பெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நேர்முகத் தேர்வில் தகுதியும் விருப்பமும் கலந்துகொள்ளலாம். நிறுவனம்: Bharat Electronics Limited BEL காலியிடங்கள்: 25 பணி: ஒப்பந்த பொறியாளர் தகுதி: பி.இ, பி.டெக் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.15,000 - 20,000 நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.02.2015 நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தேவையான அசல் சான்றிதழ் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் Indraprastha College of Engineering 63, Site-IV, Suryanagar Flyover Road, Sahibabad, Ghaziabad ,Uttar Pradesh என்ற விலாசத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bel-india.com/sites/default/files/Recruitments/Detailed%20Advt.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும். |
தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் பணி Posted: 04 Feb 2015 04:53 AM PST மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் செயல்பட்டு வரும் National Institute of Virology என்ற மருத்துவ ஆராயச்சி மையத்தில் காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Multitasking Staff (Technical-Lab) காலியிடங்கள்: 10 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் DMLT முடித்திருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பணி: Multitasking Staff (Maintenance) காலியிடங்கள்: 03 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். பணி: Technical Assistant (Eng Support) காலியிடங்கள்: 02 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Technician-C(Engineering Support) காலியிடங்கள்: 02 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: அறிவியல் பிரவில் +2 தேர்ச்சி பெற்று Electrical/Wireman பிரிவில் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Technician-B (Engineering Support) காலியிடங்கள்: 02 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrician/Refrigeration, Air Conditioning பிரிவில் ஐடிஐ முடித்து 8 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Assistant காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும் தகுதி: பி.காம் முடித்து 5 வருட கிளார்க் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Lower Division Clerk காலியிடங்கள்: 10 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும். தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Library & Information Assistant காலியிடங்கள்: 02 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: B.L.I.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை பாரத ஸ்டேட் வங்கியில் செல்லானை பயன்படுத்தி கட்டவும். இதற்கான செல்லான் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். விண்ணப்பிக்கும் முறை: www.niv.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2015 ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 23.02.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.niv.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும். |
You are subscribed to email updates from DAILY THANTHI JOBS To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
Good blog with good pictures, very informative, we are tempo Traveller rental company based in Gurgaon, providing tempo Traveller rental,hire services
ReplyDeleteVisit our website https://www.tempotravellerinncr.in/Tempo-Traveller-in-Gurgaon.htm
call us : +91-9560075009